Monday, June 25, 2012

அபோட்சிலி தோட்டத்தில் வாழும் மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எப்போதும் சிந்தித்தும் அக்கறையோடும் தமது வாழ்க்கையை முன்னெடுப்பதில் அக்கறை கொண்டவர்கள். பலர் அத்தோட்டத்தில் படித்தும் பதவியிலும் இருக்கின்றனர்.
அந்தத் தோட்டத்தில் ஆதவன் நல்ல தவைனாக இருந்தான். தனது தொழிற்சங்கத்தை அவன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவன். மக்களுடைய பிரச்சினைகனை தானே தெரிந்து கொண்டாலும் அவனுக்கு ஒவ்வொரு லயத்திலும் ஆட்களிருந்தனர். அவர்கள் அங்கு நடக்கும் விடயங்களையும் மக்களுடைய எதிர்பார்ப்புக்களையும் நல்ல முறையில் ஆதவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.
தமது மக்களின் பிரச்சினைகளை தனது தொழிற்சங்கத்தினூடாகக் கொண்டு சென்று மக்களுடைய தேவைகளை நிறைவேற்றினான். மக்களுக்காகவே அந்த தலைவன் வாழ்ந்தான். ஒருவேளை, ஆதவனுக்கு சரியான ஆட்கள் விடயங்களைத் தெரிவிக்காமலிருந்தால் அவனால் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்க முடியாது.
அருகிலிருந்த வள்ளித் தோட்டத்தில் உள்ள ராமன் தன்னிச்சையாக செயற்படுவதால் ஏற்படும் விபரீதங்களை ஆதவன் அடிக்கடி யோசிப்துண்டு! எதேசச்திகாரமான தலைவனுக்கு ராமன் தான் நல்ல உதாரணம். ஆதவன் தனது மக்கள் பணியை நல்ல அன்பர்களின் துணையுடன் பிரச்சினைகளைக் கேட்டறிந்து மக்கள்மனதை வென்றான்.

       குறள்  583             ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
                                        கொற்றம் கொள்ளக் கிடந்தது இல்.

No comments:

Post a Comment