யூ.எஸ்.ஏ மாப்பிள்ளையும் பிருந்தாவும்.....




பிருந்தா இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. அவள் ஓரே எரிச்சலுடன் இருந்தாள். அவளுடைய அந்தக் கனவு. எப்போது நிறைவேறும் என்ற ஏக்கம் மட்டும் அவளது நினைப்பில் பெருமூச்சாக அவ்வப்போது வந்து விழுவதை அவளத வீட்டார் காணாமல் இல்லை.

என் செய்வது? ஆடம்பரம்.அந்நியதேசம்.வருமானம் இப்படி பல கற்பனைகளோடு அமெரிக்க மாப்பிள்ளைக்கு கன்னிகாதானம் செய்ததன் விளைவு! ஐந்து வருடமாகியும் அவன் வருவான்... அழைத்துப் போவான்.. என ஏங்கியபடியே அவளது வாழ்வு போகிறது.

ஒரு இரண்டு வருடம் அவனது தொடர்பு செட்,ஸ்கைப்,போன் என்று வந்து அவளது தனிமையை ஓரங்கட்டியிருந்தது. இப்போது வருடம் மூன்று,நான்கு,ஐந்து என ஓடிக்கொண்டிருக்கன்றது.

காதல் அவளை துரத்திக் காதலித்த போது அவனும் அவளை அதிகமாகவே துரத்திக் காதலித்தான். அந்த வெள்ளவத்தைக் கடலில் அவர்களது பாதங்கள் வரலாறு சொல்லும். அவளுடைய சுருண்ட கேசம் காற்றில் அலைபாயும் போதெல்லாம் அவன் அவளது தலைமயிரை வருடி எடுத்து அழகாக்கும் போதெல்லாம் அவள் கூனிக்குறுகிப் போவாள்.

மகள்... வேணாம்டா... இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைங்க எல்லாம் அங்க என்னா செய்றாங்கனு தெரியாது.... நாம போயா பார்க்கிறம்? நம்ம குடும்பத்துக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் செஞ்சா நல்லதும்மா.... கொஞ்சம் யோசி..............

தினந்தோறும் பிருந்தாவிற்கு இதைக் கேட்டு அலுத்துப் போய்விட்டது.

எனக்கு கௌதம் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையிருக்கிறதம்மா... அவர் அப்பவே சொன்னார் தானே! அவுங்கட நாட்டுல அஞ்சு வருசம் இருந்தா மட்டுந் தான் சிட்டிசன் கிடைக்கும் என்று.. பிறகேன் உந்த வார்த்தைகளை உதிர்த்து என்ன பைத்தியம் பிடிக்க வக்கிறீங்க.......

இல்லையம்மா ... இப்ப உனக்கு வயசாகிட்டேப் போகுது..... நீ இப்புடியே அங்க போகாம தனிச்சுப் போயிருவோயினு பயமா கிடக்கு....... அதான் கெதியிலை முடிவெடு. இல்லாட்டி அத அப்பிடியே காற்றுல துஸக்கிப்போட்டுட்டு வேற உள்ளுர் மாப்பிளய பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ... அவ்வளவு தான் சொல்லுவேன்...

அவளுடைய அம்மா தினந்தோறும் பிருந்தாவை நினைத்தே களைத்து போயிருந்தாள். அவளுடைய மார்புப் புற்றுநோயும் அவளை செல்லரித்துக் கொண்டிருந்தது. வெளியில் தெரியாமலே அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போய்க் கொண்டிருந்தாள்.

பிருந்தா! கௌதமின் நினைவை மறக்க முடியாமல் தவித்த தவிப்பு கௌதமிற்கு எங்கே தெரியப் போகின்றது. அவன் அவளை கௌரமாக ஏமாற்றியிருந்தான். இப்போது யூ. எஸ். ஏயில் அழகான பொண்ணாம். சொந்தத்துக்குள்ளேயே வரனாம். நல்ல சீதனத்தோடு முடித்து ஜாலியாக இருப்பதாக அவனுடைய சிநேகிதப்பிள்ளை அரதசல்புரசலா சேதி சொல்லியிருந்ததை பிருந்தாவின் தமயன் தமக்கையிடம் சொல்ல முடியாமல் வேறு திருமணத்திற்கு அவளைக் கட்டாயப்படுத்தினான்.

பதினெட்டு வயதில் ஆரம்பித்த காதல்! பத்து வருடமாகிப் போனது. அவள் வயது சொல்லாமலே மாப்பிள்ளை தேடும் படலத்தோடு சேர்த்து முப்பதை அழகாகத் தொடங்கியிருந்தது.

பிருந்தாவின் தாயும் இப்போது அவளை எந்த நச்சரிப்பும் செய்வதில்லை. அவள் தான் உயிருடன் இல்லையே.இறந்து மூன்று வருடமாகிப் போயிருந்தது. பிருந்தா தனிமையை மெல்ல உணர்ந்தாள். அவளுக்கு அரசாங்க உத்தியோகமும் கிடைத்தது.



காலம் ஓட ஆரம்பித்தது. வயது முப்பத்து நான்கைத் தொட்டதும் , இனியும் அவன் வரமாட்டான் என உண்மையாகவே உணர்ந்தாள். அதன் பயன்.. தனக்கு நெருக்கமான தோழிகளிடமும் உறவினர்களிடமும் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தாள். அனைவரும் சந்தோசத்துடன் அவள் முடிவை வரவேற்றார்கள்.

இனி இந்த யூ.எஸ்.ஏ கனவெல்லாம் வேண்டாம்.............. தன்னைப் புரிந்து கொண்ட மாப்பிள்ளை கிடைத்தால் போதும்........ அவள் தலையை அந்த சாய்வு நாற்காலியில் புதைத்துக் கொண்டு கௌதமி இருந்த புகைப்படங்களை தனது புதிய வாழ்க்கைக்காக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள் அந்த குப்பை வாளிகள் இரண்டும் நிறைந்து போய்விட்டன.

பிருந்தாவின் பெயர் திருமண உலகில் நிறைவே பேசப்பட்டது.

அவள் யாரோ அமெரிக்கா பையனோட சுத்தி திரிஞ்சதா சேதீ.... எல்லாம் முடிஞ்ச பிறகு யார் இருக்காவாம் அவளக் கல்யாணங் கட்ட... அவனோட சுத்தயில வெளிநாட்டு மாப்பிள்ள எண்டு அவளோட திமிறப் பார்க்கோணுமே.......................

மார்கழி முற்த்திற்கு சாணியை தெறிப்பது போல விமர்சனங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. நாற்பது வயதாகியும் பிருந்தா.................. ஊராரின் அமர்க்களமான விமர்சனங்களால் வரும் வரனெல்லாம் விலகி ஓடியிருந்தன...............

பிருந்தா.. அந்த அரசாங்க உத்தியோகத்தைச் செய்து கொண்டு தொடர்ந்தாள். வாழ்க்கையை அவ்வப்போது அந்த வீட்டு வாசலிலுள்ள வேப்ப மரத்துக்கடியில் நின்று அசைபோட்;டுக் கொள்வாள்............ தொலைந்த வாழ்க்கைக்காக அவ்வளவு மட்டுந்தான் அவளுக்கு சுதந்திரமிருந்தது.

முற்றும்.