Monday, April 25, 2011

கூட்டுக் களவாணி

கூட்டுக் களவாணி

அந்தத் தோட்டம் மிகவும் வரண்டு போயிருந்தது. மலைத் தேசத்திற்குள் ‘எங்கும் பசுமை! எதிலும் பசுமை!’ என்பதில் தோற்றுப் போயிருந்தது அந்தத் தோட்டம்!.
வாழ்க்கையின் வரட்சிக்கு அவர்களது அடுப்புத் திண்ணைகளே சாட்சி. அழகாய் வார்த்து மெழுகிடப்பட்டது போல அந்த அடுப்பு. மாசு மறுவில்லாமல் ப+சப்பட்டிருந்த சாணிச் சாயத்தில் மாக் கோலம் எசகுபிசகில்லாமல் ஓவியனின் தூரிகையை மிஞ்சியிருந்தது அந்தக் கை வண்ணம்! அநேகமாக அந்தக் கோலத்திற்கு வயசு குறைந்தது ஒரு வாரமாகவேனும் இருக்கும்.அரிசியின் வரவை அது வழி மேல் விழி வைத்துக் காத்துக்கிடந்தது.
ஏதோ சில வீட்டுப் பிள்ளைகள் கொழும்பில் ‘கார்மெண்ட்ஸ்’, கடைகள், என விரல் விட்டு எண்ணக் கூடிய இரண்டு ஆசிரியைகள்,ஒரு பொலிசுக்காரர்,தோட்டத்து ஆசுப்பத்திரியில் ஆயா வேலையில் ஒருத்தர், என அந்தத் தோட்டத்தில் கொழுந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் வறுமையை விரட்டி வாழ்க்கையை வளமாக்கும் சுமார் பத்துப் பதினைந்து குடும்பம்.ஆனால் தேயிலையே வாழ்க்கை என வாழும் மிச்ச சொச்சத்தில் ஒரு நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.
அதில் மலைச்சாமி குடும்பம் கொஞ்சம் விசேசமானது.தெரிந்தோ தெரியாமலோ இப்போதெல்லாம் தோட்டத்து தொழிலாளர் குடும்பங்களில் கணக்குக்கு மூனோ இரண்டோ தான் பிள்ளைகள். அதில் நம்ம மலைச்சாமி கொஞ்சம் விசேசமானவர்.கடைசி காலத்தில் குழந்தைகள் ‘தம்மை தாங்கும்’ என்ற விடாப்பிடிக் கொள்கைக்காரர்.பிறகு சொல்ல வேண்டுமா என்ன? கருத்தடை சிபாரிசுக்கு வரும் அந்தத் தோட்டத்து மகளிர் கள உத்தியோகத்தருக்கு ஏச்சு தான் மிஞ்சும்.எதற்கும் கவலைப்படாத மனிதர் மலைச்சாமி.
பாவம் மனைவி என்ற பெயரில் கணவன் சொல்லைத் தட்டாத பதிவிரதை. மெசினுக்கும் அவளுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது.மெசினுக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ‘சிங்கர் ஒயில்’ தான் எல்லா வீடுகளிலும். செல்லம்மா என்கிற மெசினுக்கு மட்டும் மாதத்தில் மூன்று நாள் விடுமுறை கிடைக்கும்.அதுவும் அரசாங்க செலவில். ஓய்வை அவள் பணக்காரர்களைப் போல வைத்தியசாலையில் கடத்திவிடுவாள். ஓரே ஒரு குறை தான். அப்பிள் இருக்க வேண்டிய இடத்தில் சுசிறி ஹோட்டல் காய்ந்த றோஸ்பான் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும்.
வீடு. அது மலைச்சாமி வீட்டில் குசேலரை விடக் கொஞ்சம் குறைவு தான். என்ன ஒரு எட்டிருக்கும். எட்டடி எடுத்து வைக்கவே கஸ்டப்படும் செல்லம்மாவின் இடுப்பிற்கு இதெல்லாம் மகிழ்ச்சியான விசயம் தான். ‘ஏழைகள் வீட்டில் இறைவன் இருப்பான்’ என்பது போல அவர்களது வீட்டில் அடுப்பெரிய மறந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிள்ளைகளின் குறும்புகளை பார்த்து இரசிப்பதே அவர்களது வேலை. அவ்வளவு ஒற்றுமையான தம்பதி.
காலம் தான் அங்கு வாழ்க்கையை ஓட்டியது.செல்லம்மாவின் இடுப்பு இன்னொரு சுமைக்குத் தயாரானது.
இரண்டு முதல் ஐந்து வரையான ‘பொம்புள புள்ளங்க’ வயசுக்கு வரத் தயாராகிட்டாங்க.மலைச்சாமி மலைக்கவில்லை.அது தானாக நடந்து முடியம் என்ற நம்பிக்கை அவனுக்கு.
செல்லம்மாவுக்கு இப்போ தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.மூத்த புள்ள எப்போதும் “அம்மா,என்னுட்டு கூட்டாளிங்களுக்கு ப+ப்புனித நீராட்டு விழா செய்ற மாதிரி எனக்கும் செய்வியாம்மா?” அசந்து போய்விடுவாள் செல்லம்மா.பதிலை எப்டிச் சொல்வது? ஒரு வேளை அடுப்பெரியவே பெரும் போராட்டம். இதில் நூறு பேரை அழைத்து விருந்து வைக்கிறதெல்லாம் நடக்கிற விசயமா?அவள் பதில் நம்பிக்கையுடன் வருவது தான் வேடிக்கை.
“அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாரம்மா. நீ யோசிக்காத.நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி எல்லாம் செய்வோம்”
‘நம்ம தகுதி’. வயசுக்குவரும் ஏக்கத்துடன் காத்திருக்கும் மகேசுக்கு இது தான் புரியவில்லை. “எது நம்ம தகுதி? அவள் இப்படியிருக்குமோ? அல்லது பெட்டிக்கடைக்காரர் மகள் கோகிலாவின் சடங்கைப் போல நம்ம தகுதியிருக்குமோ?”
“அப்படியிருந்தால் சந்தோசம். வீடியோ எடுப்பாங்க.படம் பிடிப்பாங்க.கோழி விருந்தெல்லாம் இருக்கும். நானும் என்னுட்டு ‘பிரண்ட்ஸ்’ எல்லாம் நின்னு படம் பிடிப்பேன். அழகான இதயம் போட்ட ‘எல்பம்’ தான் வாங்கனும். அப்புறமா எப்பிடியாவது செல்போன்ல பேசுற மாதிரி ஒரு படம் எடுத்து பெருசாக்கி போடனும்.என்னமோ எல்லாரும் பீத்திக்கிறாளுக. அவளுக கிட்ட மட்டும் தான் ‘சோலி கிட்’ இருக்காம்”
அந்த அளவில் மலைச்சாமி பாராட்டப்படவேண்டியவன் தான். இலவசக் கல்வியை அவனுடைய பிள்ளைகளுக்காக விரட்டிப் பிடித்து விடுவான். மகேசுவுக்கு ஆங்கிலம்,சிங்களம் நல்லா வரும் என்ற செல்லம்மாவின் பீத்தலும் பொய்த்துவிடவில்லை.
“மகேசு! இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்படி? போ. போய் வேலயப் பாரு” செல்லமாவின் குரல் அவளை நிதானத்துக்குக் கொண்டு வந்தது.
“மகேசு இப்ப கொஞ்சம் மாறுதலா தான் இருக்கிறா! அந்தக் காலத்துல பெரிய புள்ளங்கள ஆவுறதுனா பயம்! வெளிய துறுவ அனுப்ப மாட்டாங்க.வெளயாட முடியாது.லயத்துக் காடெல்லாம் சுத்த முடியாது. தாவணிய சுத்தி மூலையில ஒக்கார வச்சிருவாங்க. இப்ப உள்ள புள்ளங்க எப்படா பெருசாகுவோனும் நிக்குதுங்க”
“தீபாவளி எப்போம்மா வரும்?ங்கிறது போயி எப்ப எனக்கு ‘ப+ப்புனித நீராட்டு விழா’ செய்வீங்களானு கேக்கிற நாகரிமாப் போச்சு.இருக்கிறவனுங்கெல்லாம் விழா செஞ்சுடறானுங்க.நம்ம புள்ளங்கள அங்க அனுப்புனது தான் தப்பாப் போச்சு”
மலைச்சாமி நாலாம் நம்பர் மலையில் கவ்வாத்து வெட்டிய களைப்புடன் கட்டைக் கழிசானை தடவியபடி உள்ளே நுழைகிறான்.வரும்போதே செல்லம்மாவின் புதிய நச்சரிப்புக் காத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
“என்னாங்க! நம்ம புள்ள வயசுக்கு வாற மாதிரி இருக்கு.செலவு நெறைய இருக்கு.கஸ்டத்தோட கஸ்டமா நாம ஊருல எல்லாத்துக்கு மொய் எழுதிருக்கோம்.நம்ம புள்ளவுட்டு விசேசத்தையும் பெருசா செய்யனும்ங்க!”
“அதுக்கு என்னா செஞ்சுட்டாப் போவுது.அதான் ஆட்டுக் குட்டி ரெண்டு இருக்கே.வித்தா செலவுக்கு ஆகும்”
“என்னாங்க!நம்ம புள்ளங்கள மாதிரி வளர்த்துட்டு அதப் போயி விக்கிறதா”
“என்னா செல்லம்மா? நாம என்னா குண்டுமணித் தங்கமா வச்சிருக்கோம்.எனக்கு மட்டும் ஆசையா விக்கிறதுக்கு? இப்ப கிலோ ஒன்னு எட்டுனூறு போவுது.எப்படியும் ஒன்னு இருபது கிலோ தேறும்.
வித்தா மொத்தமா ஒரு முப்பது நாப்பது வரும்.அத வச்சி செய்வோம்.அப்புறமா நம்ம கடைக்கார சேரு!
ஈ.பி,பஎப் பணத்த அடமானமா வச்சி காசு தாராறாம்.அது கெடக்கிதானு பார்க்கிறேன்.”
“அது நல்ல யோசனங்க. ஈ.பி,எப் காசுல கெடச்சா விசேசசமா செய்யலாம். கேட்டுப் பாருங்க!”
மலைச்சாமிக்கு வழமையான பிளேன்டி போய் இன்று இருபது ரூபா நெஸ்பிறே பக்கட்டிலிருந்து விருந்தாடித் தேத்தண்ணி மாவு வந்தது.
“இந்தாங்க. களைச்சிப் போயி வந்திருப்பீங்க! மூஞ்ச கழுவிட்டு குடிங்க.அப்புடியே அந்த புறோக்கர் பொன்னையாவப் பார்த்து ‘டவுனு சேர’ பார்த்து விசயத்த சொல்லி கேக்கச் சொல்லுங்க”
“சரிம்மா, நீ யோசிக்காத. குடிச்சுட்டு நான் போறன்.எல்லாம் சரி வரும்.”
மலைச்சாமி வைரம் பாய்ந்த கட்டை.நம்பிக்கை தான் அவனது மூலதனம்.அலட்டிக் கொள்ளமாட்டான்.
“பொன்னையா................. பொன்னையா........................”
“யாரு? ஆ.... மலைச்சாமி அண்ணனா...... கொஞ்சம் இருங்க.............. அவரு கொள்ளப் பக்கமா போயிருக்கிறாரு. வாங்க இந்த சோபாவில உக்காருங்க”
மலைச்சாமி அந்த சோபாவில் உட்காற யோசித்தான். “சுவரோரமா பெத்தாம் பெரிய டீ.வி.சோபா எப்படியும் ஒரு ஐம்பது இருக்கும். நீட்டமா ஒரு றேடியோ பெட்டி. சில்வர் சாமானெல்லாம் அடுக்கி வக்கிற அந்த அலுமாரிய தூக்க ஒரு பத்துப்பேறாவது வேணும்.பெரிய கோப்பை ப+ட்டி தான் அவுங்க டீ.வி பார்க்கிறாங்க போல.....” அவன் மனம் பேசியது.
“வாப்பா... மலைச்சாமி.... என்னாப்பா இந்தப் பக்கம். நீ தான் வட்டிக்கு எல்லாம் வாங்க மாட்டியே!
என்ன சங்கதி?”
மலைச்சாமிக்கு மனசே கலங்கியது.இதுவரை எவரிடமும் கை கட்டி நின்று கைமாத்தோ,வட்டிக்கு பணமோ வாங்காதவன் அவன்.
“என்னா செய்யிறது? தேவைன்னு வந்தா வாங்கத் தானே வேணும்?”
புறோக்கருக்கு தலை சுற்றியது.மலைச்சாமியிடம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா என்ன?
அவன் யோசிப்பது மலைச்சாமிக்குப் புரிந்தது.
“அண்ணன்.. வட்டிக்குப் பணம் வேணாம்.என்னுட்டு ஈ.பி,எப் பணத்த அடமானமா வச்சி செவுனு கடை சேர்ட்ட வாங்கித்தாங்க!”
“அது கொஞ்சம் கஸ்டம். முன்ன மாதிரி இல்ல. இப்ப பேப்பர்காரணுங்க பொய்க்கு மோசமா எழுதுறானுங்க. அதுனால் ஆபிஸ்ல எதுவும் செய்யப் பயப்படறாங்க”
“என்னா? அண்ணன் நீங்க தான் எப்பிடியாவுது எடுத்துத் தரணும்.ஒங்களால மட்டுந்தான் முடியும்.செல்லம்மாவும் ஒங்ககிட்ட சொல்லி கேக்கச் சொன்னுச்சு”
“சரி... சரி... எதுக்கும் நாளைக்கு வந்து பாரு.இன்னக்கி டவுனுக்குப் போறேன்.ஒனக்கு எவ்வளவு வேணும்”
“ ஒரு அம்பது கெடச்சா நல்லா இருக்கும்.மொத தேவை வருது.அப்ப கடசி நேரத்துல கஸ்டப்படாம இப்பவே ரெடி பண்ணுனா தானே சரி வரும்?”
“ஆமா, அது நல்லது தான். அது சரி யாரு பேருல வாங்கப் போற?”
“செல்லம்மாவுக்கும் ஒடம்பு முடியல.அவவுக்கு வயசு நாப்பதாச்சு.அவ பேருல வாங்குறன்”
“அப்ப சரி நளைக்கு வாப்பா பாப்ப்போம்.....”
மலைச்சாமி சுமையை புரோக்கர் பொன்னையாவிடம் இறக்கி வைத்த நிம்மதியில் வீடு செல்ல அந்த ரொட்டித் தகரமாய் நெழிந்து வளைந்திருந்நத பாட்டாவை கால்களில் பவ்யமாகச் சொருகிக் கொண்டிருந்தான்.
“அப்பா..... அப்பா.............ஒடனே அம்மா வரச் சொன்னாங்க.........வாங்கப்பா......”
பதைபதைத்துப் போன மலைச்சாமி அவசர அவசரமாக ஓடினான்.அவனது மூத்த மகன் அப்பாவுடன் சேர்ந்து ஓடினான்.
“என்னாப்பா .. மக வயசுக்கு வந்துட்டா...மாமன்காரனுக்குச் சொல்லியனுப்பு...................”
அந்த மூக்காயியின் குரல் அவனுக்குச் செய்தியைத் தெளிவாகச் சொன்னது.
மலைச்சாமி முகத்தில் ஓரே சந்தோசம்.அவனது மச்சான் இருளாண்டியிடம் விசயத்தை நேரடியாகச் சொல்வது தான் சரி என்று நினைத்தவன் வேட்டி சட்டை மாற்றி தாம்பாளத் தட்டுடன் சென்றான்.
“வாங்க மச்சான்.... என்னா........... என்னுட்டு மருமக வயசுக்கு வந்துட்டாளாமே.... ரொம்பச் சந்தோசம்...... நானும் பவுனும் அங்க வரத் தான் பொறப்பட்டோம்”
“அப்பிடியா நல்லதாப் போச்சு.. சரி தட்ட வாங்கிக்குங்க’
“அதுக்கு என்னா மச்சான்? நம்ம வீட்டு விசேசத்துல இதெல்லாம் எதுக்கு?.....................”
“எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு தானே”
“சரி..சரி பேசிகிட்டே இருந்தா நேரம் போயிரும்.வாங்க போவம்” பவுணின் அதட்டலுடன் கூடிய பரபரப்பு அவளது குரலில் தெரிந்திருந்தது.
மலைச்சாமியும் மச்சானும் பவுனும் சடங்கு வீட்டை நோக்கி நடந்தனர். ‘பங்சனைப்’ பத்தி மச்சானிடம் பேசி புறோக்கர் பொன்னையாவிடம் சென்றதை எடுத்துச் சொன்னான்.
“மச்சான்............. கவனம் பொன்னையாவும் செவுனு மொதலாளியும் நெறையப் பேற ஏமாத்தியிருக்கிறதா சொல்றாங்க”
“என்னா செய்யிறது? பேங்குலயா சேத்து வச்சிருக்கோம்? இது மட்டுந்தானே நமக்கிருக்கிற சொத்து. வேற வழியில்ல.புள்ளயும் ஆசப்படுது.செல்லம்மாவும் பெருசா செய்யனுங்குது.அதோட நெறய பேருக்கு நாமலும் செஞ்சிருக்கோமே? அதெல்லாம் வாங்க வேணாமா? மொத ‘பங்சன்’ வேற...........................”
“அப்ப சரி! நாளக்கி பொன்னையாவ பார்க்கப்போவம்? இன்னக்கி சாமானெல்லாம் இருக்கா?”
“பெருசா இல்ல......... கையில காசும் இல்ல.பெட்டிக் கடையில தான் கொஞ்சம் கடன் கேக்கணும்”
“வேணாம்... வேணாம்..... இப்ப வீட்டுக்கு தேவயான சாமான நான் வாங்கித் தாறேன்”
இரவு வந்தது.மச்சான்மார்கள் கொஞ்சம் சாராயம் குடித்துக் கொண்டார்கள்.நடுச் சாமம் வரை கதை பேசி அப்பிடியே தூங்கிப் போனார்கள்.பொழுது புலர்ந்தது.மலைச்சாமியின் முதல் வேலை புரோக்கர் பொன்னையாவைப் பார்ப்பது தான்.
“அண்ணன்........ அண்ணன்....................”
“ஆ! மலைச்சாமியா? ஓன் விசயமா கதைச்சேன் மெதல்ல ஏலாதுன்னாரு.பெறகு ஒனக்காகப் பேசி ஒத்துக்க வச்சிட்டேன்.பத்து மணியப் போல நீயும் செல்லமாவ கூட்டிக்கிட்டு வா.நம்ம ஆட்டோவுல போவம்.வாறப்ப அயடிண்டி கார்டு,பேங்கு பாஸ் புக்கு,ஈ.பி.எப் துண்டு எல்லாத்தயும் மறக்காம கொண்டு வந்துரு”
எல்லாம் அறிந்தவன் போல “அதெல்லாம் நேத்து ராத்திரியே மச்சான் சொன்னாரு.எடுத்து வச்சிட்டேன்”
என்றான் சந்தோசத்துடன்.ஆனால் அவனுக்கு இப்போதெல்லாம் மகேசுவின் சடங்கு மட்டும் தான் நினைவுக்கு வந்தது.தருணம் பார்த்து பாம்பு அடிக்கும் வித்தை எல்லாம் அவனுக்குத் தெரியாது.
புரோக்கர் பொன்னையாவுக்குத் தான் அது வைந்த கலை.
மலைச்சாமி ஆட்டோவுக்குள். செல்லம்மா மனக் கண் முன்னால் ‘பங்சனை’ நடத்தி முடித்து விட்டாள். கடைக்கு முன்னாள் சர்ரென்று ஆட்டோ பிரேக் விழுந்தது.................... விழுந்தது அவர்களின் ஈ.பி,எப் பணத்திற்கும் தான்.
கையொப்ப விவகாரம் எல்லாம் முடிந்தது.அறுபது ஆயிரத்திற்கு கடிதம் எழுதப்பட்டது .கையில் ஐம்பது கொடுக்கப்பட்டது.ஏதோ மாதம் அஞ்சு வட்டி மட்
டும் தானாம்.மிச்ச அஞ்சும் செலவுக் கணக்காம்.
இந்த ‘அஞ்சு’. அவர்களுக்குப் புரியவில்லை.வாங்குன காசுக்கு மாசம் அஞ்சாயிரமாம்.
சடங்கு அதாவது ‘ப+ப்புனித நீராட்டு விழா’ இனிதாக நிறைவேறியது.மொய் பணம் நினைத்தவாறு வரவில்லை. “புள்ளங்க,ஆசப்படுது!ஒரு டீ.வி வாங்கிருங்க.வயசுக்கு வந்தப் புள்ளங்க அக்கம் பக்கத்து வீட்டுக்குப் போனா என்னா நல்லாவா இருக்கு? செல்லம்மா மொய் பணம் இருபதுக்கு வேலை வைத்திருந்தாள்.மலைச்சாமிக்கு அது சரியென்றேபட்டது.
வருசம் இரண்டாகியது.செல்லம்மா நோய்வாய்ப்பட்டாள். ஈ.பி.எப் பணத்திற்கு எழுதப்பட்டது.மொத்தமாக ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரத்து முன்னூற்றி சொச்சமாம்.மலைச்சாமிக்கு இப்போது தான் புரோக்கர் பொன்னையாவும் செவுனு சேரும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
“அண்ணன்... அண்ணன்.... ஈ.பி.எப் பணம் வந்திருச்சு....ஆபீஸ்ல சொன்னாங்க...”
“ஆமாம் மலைச்சாமி நானும் சொல்லனும்னு நெனச்சேன்.அது பேங்குல போட்டு கணக்குப் பார்த்தா நீ தான் மிச்சம் கொடுக்கணும்.ஒரு ஏழாயிரம் அளவுல தேடிக்கிட்டு வந்திரு........................”
“என்னா சொல்றீங்க அண்ணன்..........................” மலைச்சாமிக்கு தலை சுற்றியது.
“பாரு........................மலைச்சாமி, அறுபது மொதல்ல கொடுத்தாச்சு.மாசம் அஞ்சுப்படி இருபத்தினாலு மாசம்.அப்ப ஒன்னு இருபது வருது.மொத்தமா ஒன்னு எம்பதாச்சு! ஒனக்கு வந்திருக்கிறதோ ஒண்ணு எழுபது சொச்சம்!அப்ப மிச்சத்த கொண்டு வந்து கொடுத்திரு!எனக்கு வேல இருக்கு நான் வாறன்”
பதிலைக் கேட்காமலே புரோக்கர் பொன்னையா இடத்தைக் காலி பண்ணினான். மலைச்சாமி வாயடைத்துப் போய் வெளியேறினான்.ஒரு சந்தோசம் அவனுக்கு.அவனுடைய ஈ.பி.எப் பணம் மிஞ்சியது தான். செல்லம்மா மிச்ச காசு வரும் என்று காத்திருந்தவள் விசயம் புரியாமலே இவ் உலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டாள்.
மலைச்சாமி இனி எந்த மகளுக்கும் சடங்கு சுத்தப் போவது இல்லை. அவனுடைய பிள்ளைகளும் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். பாடசாலையில் அவர்கள் ‘படிக்கின்ற மாணவிகள்’ அல்லவா? சடங்கு சுத்தியதில் அந்த வீட்டுக்கு புது வரவாக இருந்த அந்த டீ.வி மட்டும் மனதில் நிறைந்த கானங்களில் ‘ போனால் பொகட்டும் போடா........................................” பாடலை ஒலித்துக் கொண்டிருந்தது.மலைச்சாமி நினைத்துக் கொண்டான்.
“ஏமாறும் தொழிலாளர்களுக்கு நம்ம பாடம் புத்தி சொல்லும்” என்று.
அந்த வகையில் அவனும் ஒரு ஆசானாகின்றான்.
பிள்ளைகளை அந்தப் பாடசாலையும் நிர்வாகமும் தலைநிமிரச் செய்திருந்தது. இப்போது இரண்டாவது மகள் ‘தோட்ட விழிப்புறவுக் கழகத்தின்’ தலைவியாய் தோட்ட மக்களுடைய அறியாமைக் கடலை அப்புறப்படுத்துவதற்காகச் சமூகத்தின் கைகோர்த்துக் கொண்டிருக்கிறாள்..

முற்றும்.

சாணி – மருதாணி

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

சாமி மூச்சுத் திணறிக்கொண்டான்.அந்த வடிகால் பாதையினூடாக அவனது கால்கள் தலையிலே விற்பனைக்காகக் கொண்டு செல்லும் கருவாட்டுப் பொதிகள்.வியர்வை வடிய கருவாட்டு மணமும் சேர்ந்து தலைப்பாகை வழியாக தலையைதொட்டு முகத்தை முத்தமிட்டுக் கொள்ளும்.அவன் உணவில் உப்பு சேர்க்கின்றானோ இல்லையோ ஒவ்வொரு நொடியும் அவனது வாயில் உப்புச் சேர்ந்து கொண்டே இருக்கும்.உழைப்பு! அவனுக்கு வியற் காலை ஆறு மனியிலிருந்து வீடு திரும்பும் வரை.ஒருவேளை அது மாலை ஆறுமணியாகவும் இருக்கலாம்.அல்லது இரவு பத்து மணியாகவும் இருக்கலாம்.அவன் கால்கள் வாகனம் அறியாது.நடைக்கு அவன் ராஜா.அவனது பாதம் கண்ட மைல்களைக் கணக்கிட்டால் அது ஆயிரக் கணக்கிலிருக்கும்.அவனுக்கும் காதல் வந்தது.கூடையில் கருவாடு சுமந்தாலும் மனம் கருவாடு அல்லவே!அவனது காதல் ஒரு அற்புதமான திறைமறைவிலிருந்து வெளிவராத ஓர் உண்மைக் காதல்!
அவனும் காதலித்துவிட்டான் என்றால் பாருங்கள்!

இராணித்தோட்டம்!அது பசுமையில் திளைத்த காலம்!சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் தமிழகத்து கூலிகள் என்ற பெயரில் அழைத்துவரப்பட்ட பட்டாளம்.அவர்களில் ஒரு பரம்பரை.ஊரில் மரியாதைக்குரிய பரம்பரை.அந்தக் காலத்திலேயே அச்சுமடியாத வேட்டி,பட்டன் இல்லாத சட்டை,சால்வை என ஊர் பெரிய மனிதராய் வலம் வந்தக் குடும்பத் தலைவன்.சற்றும் எதிர்த்துப் பேசாத குணவதி தாய்
குந்தாளம்.ஆண் பிள்ளையானாலும் சான் பிள்ளை என நான்கு ஆண் பிள்ளைகள்.ஆசைக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.இறுதி கடைக்குட்டி மீதுதான் சாமிக்கு ஒரு கண்!லெச்சுமி மாநிறம் தான்.ஆனாலும் அந்தக்கால சினிமா நடிகைளை ஞாபகப்படுத்துவாள்.
தினமும் பத்து மைல்களுக்கு மேல் உழைப்பிற்காக சாமி பயணித்தாலும் அவனது களைப்பேறிய முகம் அந்த லெச்சுமியின் முகம் கணடதும் மறந்து போவான்.மலைகளின் கொழுந்திற்குள்ளே அவளது முகம் கொழுந்தாய் இளமையாய் அவனது மனதை அள்ளிக் கோள்ளும்.பனிபடர்ந்தது கொழுந்துகளில் மட்டுமல்ல!அவளது முகத்திலும் தான்! சாமி மனதிலே கவலைபட்டுக் கொள்வான்.அவன் மனம் அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்ளும். “ பாப்பா! கவலைப்படாதே! இன்னும் சில நாட்கள் தான்.எப்படியும் உன் அப்பாவிடம் பெண் கேட்டு சம்மதம் வாங்கிவிடுவேன்” என்ற நம்பிக்கையை அவனது உதடுகள் அசைபோட்டுக் கொள்ளும்.
பாப்பா! வேறு யாருமல்ல!லெச்சுமி தான்.அவனுக்கு அவள் பாப்பாதான்.அவன் அவளை குழந்தையாகவே பார்க்கின்றான்.யார் மனமும் புண்படக் கூடாது என்பதில் சாமி உண்மையில் சாமி தான்.ஒற்றைக் கல் மூக்குத்தியுடன் லெச்சுமி தரும் ஒரு புன்னகைக்காக அவன் எதனையும் செய்யத் தயாராக இருந்தான்.
அன்று அந்த மலைகளிடையே லெச்சுமி தன் அக்காளுடனும் நண்பிகளுடனும் எங்கோ அவசரமாய் ஓடிக் கொண்டிருந்தாள். “என்ன இது? இப்படி லெச்சுமி எங்கே ஓடுகிறாள்?”என நினைத்து அவனும் பின் தொடர்ந்தான். “வெள்ளைக்காரத்துரை மிட்டாய் கொடுக்கிறாராம்.அது தான் இளசுகள் முதல் குஞ்சுகள் வரை இப்படி ஓடுதுங்க” என்றாள் பர்வதம் பாட்டி. “நல்ல மனசு படைச்ச வெள்ளக்காரனும் இருப்பது என்னவோ சந்தோசந்தானுங்க”சாமி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“என்ன! பாப்பா சொல்லியிருந்தா நான் வாங்கித் தந்திருக்க மாட்டேனா?இப்படி புள்ளங்களோட புள்ளயா அடிபட்டு இடிபட்டு இந்து முட்டாய வாங்கனுமா?” அவன் செல்லமாகக் கோபித்துக் கொண்டது லெச்சுமிக்கு மனதிற்குள் ஆனந்தம்.சாமி தன்னைத் தொடந்து காதலுக்காக வட்டமிடுவதை சொல்லாமல் அவள் இரசித்தாள்.
“என்னாங்க? ஒங்களுக்கும் முட்டாய் வேணுங்களா?வெள்ளைக்கார முட்டாய் நல்லா இருக்கும்”
“வேணாம்!வேணாம்! இப்படியெல்லாம் நீங்க போய் வாங்கிறது நல்லா இல்ல!ஒங்க அப்பாவுக்கு இருக்கிற மவுசுல இப்படி செய்யலாமா?”
சாமி தனக்கு விருப்பம் இல்லாததை நாசுக்காக அவளது தந்தைக்குப் பிடிக்காது என்று கூறுவதை அவள் உணர்தாள்.
“சரிங்க!இனிமே நான் வாங்கமாட்டேன்.நீங்க வாங்கித் தாறீங்களா?”
“அதுக்கு என்னா புள்ள! வாங்கித் தந்தா போச்சு”
“என்னாங்க!எப்ப வந்து அப்பாகிட்ட பொண்ணு கேக்கப்போறீங்க!எங்க அத்தான் வேற எடத்துல எனக்குப் பொண்ணு பார்க்கப் போறாரு!”
“என்னாப்புள்ள செய்யிறது?எனக்கிருக்கிறது ஒரு அண்ணன்.அவனும் மூத்த தாரத்து பிள்ள.அவன் இதுல எல்லாம் அக்கறை எடுக்க மாட்டானே!அதுனால தான் யோசிச்சுட்டு இருக்கேன்.கொஞ்சம் பொறு!அடுத்த
மாசத்துக்கு முன்னாடி பொண்ணு கேட்க வந்துடுறேன்.சந்தோசமா?”
அவன் பதில் அவளுக்கு ஆறுதல் அளித்தது.ஆனால் எத்தனை முறை? இப்படியான பதில்களைக் கேட்டு அலுத்துப் போனாள் லெச்சுமி.ஆனாலும் அவன் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அவளை மறு வார்தைப் பேசவிடவில்லை.
சாமிக்கு ஏன் யாருமில்லை?நீங்கள் யோசிப்பது புரிகிறது.அவனுக்கு ஐந்து வயதிருக்கும்.இந்தியாவில் அவனது தந்தை இறந்து போனார்.அவனுக்கு உணவு சாப்பாடு தந்து வேலை தர முன்வந்த தனவந்தருடன் ஒரு பையுடன் அவன் கிளம்பி விட்டான்.அவன் வந்த இடம்.டிக்கோயா.அங்கே தான் அவன் வாழ்க்கை புதிய கோணத்தில் ஆரம்பமாகியது.அதன் பிறகு நல்லதண்ணி லக்கசபான கடையில் அவனது வாலிப்க காலம்.அங்கிருந்து கங்கேவத்தை பசாரில் ஒரு கடைக்கு பங்குதாரராகவும் பிறகு தனிக் கடைக்கு உரிமையாளராகினான்.வாழ்க்கைத் துணைக்காக அந்த இராணித்தோட்டத்திற்குள் அவன் கால்கள் படாத இடமே இல்லை.

சாமி உறவுளல்தான் தனி மனிதன்.ஆனால் அவனுடைய நட்பு வட்டம் மிகப் பெரியது.அது ஆழ்கடலிலும் விரிவானது.அவனை அறியாத தோட்டத்து மக்கள் மட்டுமல்ல.சிங்களவர்,தமிழர்.முஸ்லிம்,கிறிஸ்தவர் என மிக பெருங்கூட்டம்.அவனது நட்புக் கூட்டம்.
யாருக்கும் ஓடிப் போய் உதவும் பண்பு!சிரித்த முகம்.குள்ளமானாலும் கள்ளமில்லா உள்ளம்.சுருட்டை முடியிலான கேசம்.ஆண்களுக்கே உரித்தான புஜ வலிமை எல்லாம் அவனிடம் வெற்றிக் கொடி நாட்டியிருந்தன!
லெச்சுமி தான் அவனது வாழ்க்கைத் துணை.அவன் அதில் திடசங்கற்பமாயிருந்தான்.அவனுக்காக தூரத்து உறவுகளும் நண்பர் கூட்டமும் பல முறை அந்தத் தோட்டத்து கதவினை தட்டிப்பாரத்து இருக்கிறது.
“அவனுக்கு, சொந்தமுன்னு சொல்லிக் n காள்ள யாருமில்ல!அநாதை மாதிரி இருக்கான்.அவனுக்கு ஏம் பொண்ண கொடுக்க முடியாது”
அந்த வாசகம் அந்தத் தோட்டம் முழுக்க மட்டுமல்ல!அந்த மஸ்கெலியா கங்கேவத்தை பசார் முழுக்க தம்பட்டம் அடிக்கப்பட்ட விடயம்.அவன் பலமுறை மனதிற்குள்ளே புளுங்கிப் போயிருக்கிறான்.இதில் அவளது தமக்கையின் கணவனின் இடைய+று வேறு.பணக்கார மாப்பிள்ளை தேடி அவனது அலைச்சலும் கொஞ்சநஞ்சமல்ல.
“ஒரு தூக்கிப் பொருளை விற்கும் ஒருவனா எனக்குச் சகலை ஆவது?” அவனது கௌரவப் பிரச்சினை அது!.
சாமி இந்தப் பேச்சுகளுக்கெல்லாம் அசரவில்லை.அவன் திடமாயிருந்தான்.லெச்சுமி மீது அவன் வைத்திருந்த நம்பிக்கை போல அவளுக்கும் அந்த நம்பிக்கையில் மாற்றமில்லை.ஆனால் பல சொந்தங்கள் அவள் மனதைக் கறைத்தன.
“இங்க பாரு புள்ள!அவன் சொந்தமுன்னு சொல்ல யாருமில்லாம நிக்கிற ஒருத்தன்.நாளக்கி நல்லது கெட்டதுன்னா யாருட்ட போயி நிக்கிறது?”
பர்வதம் பாட்டியின் எச்சரிக்கையும் நச்சரிப்பும் அவளால் தாங்க முடியவில்லை.
“அவன் ஊரு ஊரா சுத்துறவன்.யாரு கண்டா எங்கெங்க பொண்டாட்டி இருக்கோ?” போதாக் குறைக்கு வெள்ளையம்மாவின் தாய் வேறு அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.
“இங்க பாருங்க!யாரு சொன்னாலும் என்னுட்டு மனச மாத்திக்கமாட்டேன்.அவரோட தான் வாழுவேன்.என்ன யாரும் கட்டாயப்படுத்த வேணாம்” அது வரை அவளது தந்தையைப் பாரத்து ஆறடி தூரம் தள்ளி நிற்கும் லெச்சுமியின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்தது.
அன்று ஒரு புதன் கிழமை வைகாசித் திங்கள்.ஒரு படையே பெண் கேட்டு இந்த தோட்டத்து மாரியம்மன் லயத்தைச் சூழ்ந்து கொண்டது.அதற்கு ஆதரவு தெரிவிக்க தோட்டத்துப் பெருசுகளும் ஒன்று கூடி விட்டன. லெச்சுமியின் தந்தைக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் இல்ல!ஆனா நாளக்கி அவுங்களுக்கு யாரு இருக்கா?நல்லது கெட்டது எல்லாம் இனி தானே வரும்?” என்ற அவருடைய தயக்கம் நியாயமானதாகப் பட்டாலும் கூட்டம் நட்புக் கூட்டமல்லவா? விடுமா என்ன?
“என்னாங்க ஐயா! ஒங்க சொந்தக்காரங்கன்னு எடுத்துக்கிட்டா என்ன ஒரு நூறு பேரு வருமா?ஆனா நாங்க பாருங்க!ஒரு ஊரே தெரண்டு வந்திருக்கோம்ட.பயப்படாதீங்க.நாங்கல்லாம் விட்டுருவோமா?”
ஆமாம்.அந்த தோட்டம்,நகரம் மட்டுமல்லா.சாமியின் அன்பிற்குள் ஒரு பிரதேசமே கட்டுண்டுண்டுப் போயிருந்ததை அனைவரும் அறிவார்கள்.அவர்களது கல்யாணம் விமரிசையாக பல நூற்றுக்கணக்கான உறவுகள்,நண்பர்கள் என புடைசூழ நிறைவேறியது.
ஒரு அநாதை என்ற வரைவிலக்கணம் தந்த உறவுகளிலிருந்து மீண்டு சாமி இன்று சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தானோ இல்லையோ நல்ல பிள்ளைகளைப் பெற்றான் என்ற பெயருடன் உலாவந்தான்.சாமி தன் இறுதிக காலம் வரை பிள்ளைகளின் வெற்றிக்காக மட்டுமல்ல லெச்சுமியின் சந்தோசத்திற்காகவும் வாழ்ந்து மறைந்தான்.அவன் மறைவு அந்த மஸ்கெலியா நகரத்திற்கே ஒரு இழப்பாயிருந்தது.உறவுகளுக்கு அப்பால் சாமி எல்லோருக்கும் ‘மாமா’ வாகினான்.அவனது மரணம் அவன் சம்பாதித்த மனிதச் சொத்துக்களை மட்டுமே அடையாளம் காட்டி நின்றன.ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருடன் அவனது உடல் அலங்காரமாய் அதே இராணித் தோட்டத்து சுடுகாட்டில் தீயிற்குச் சங்கமமானது.
அந்தத் தோட்டத்து சுடுகாட்டு மலையின் மூலையில் லெச்சுமிக்காக அவன் இட்ட மருதாணி இன்னும் அழகாகவே சிவந்தது.அன்று பயந்து யார் வருவார்களோ?என்ன சொல்வார்களோ?என்ற அவனது பயம் இப்போது இல்லை.பல நாட்கள் மருதாணி என்று அவளுக்காக சாணியை விரல் நுணிகளில் இட்டு அவளை ஏமாற்றியபோது அவள் கொண்ட சினம் அவனது ஊடலுக்கும் கூடலுக்கும் வித்தாயிருந்ததை மறக்கமுடியுமா?ஏனென்றால் லெச்சுமி அவன் மனைவியல்லாவா?இடம் சுடுகாடு தான்.ஆனால் லெச்சுமிக்காக மருதாணியை அவன் இன்னமும் வைத்துக் கொண்டு காத்திருக்கின்றான்.அவள் வரும் வரைக்கும் அந்த மருதாணிக் கனவுகள் சாமியிடம் வாழ்வதில் தப்பில்லை தானே!ஓரே ஜாதிக்குள் அநாதை என்று வரும்போது சாமி கண்ட வேதனைகள் இனி எவரையும் தொடக்கூடாது என்பது தான் அவனது விருப்பமுங் கூட.
முற்றும்