Monday, June 25, 2012

புழுகுமூட்டை




     அமலதாசனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதை அவன் தாயார் உணர்ந்தார். 'என்னடா? அமல்....... ஒரு மாதிரியாக இருக்கின்றாய்? என்ற குரல் வந்த திசையை நோக்கினான் அமல். 'ஒன்னுமில்லையம்மா...... கொஞ்சம் தலைவலி' என்றான். மகனின் மனதினில் ஏதோ இருப்பதை தாய் அறியாமலா இருப்பாள்? அமல் மனதினில் சோரம் போயிருந்தது என்னமோ உண்மை தான்.!
அவன் அந்த பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து இப்போது ஏழு வருடங்களாகின. வங்கியில் கடன் பெற வேண்டும் என்று அவனது நெருங்கிய தோழன் பாவனா ஸ்டோர்ஸ் முதலாளி ரவி அமலிடம் கையொப்பம் இட்டுத் தருமாறு கேட்டான். துணை போனாலும் பிணை போகாதே என்பதை மறந்த அமல் கையொப்பம் இட்டுக் கொடுத்தான்.
ரவி அதற்காக வட்டி தருவதாகவும் தனது புழுகுமூட்டையையும் அவிழ்த்துவிட்டிருந்தான். பலர் மதிக்கும் வகையில் வாழும் ஒருவன் மீது சூது கொள்ள முடியுமா என்ன? நட்பின் நம்பிக்கையை ரவி ஏலம் போட நினைத்திருந்தது அமலுக்குப் புரியவில்லை. காலம் ஓடியது. வங்கி அவனுக்கு அழைப்பாணை விடுத்திருந்தது. ரவியை எங்கும் தேட முடியவில்லை. அமலின் சம்பளத்தில் ரவியின் வங்கிக் கடன் வெட்டப்பட்டது. வஞ்சகமான இச் செயலை பஞ்ச பூதங்களான நிலம்,நீர்  தீ காற்று ஆகாயம் என்பன கூட நட்பிற்கு செய்த துரோகத்தை மன்னிக்குமா? இவற்றின் நுண்ணிய வடிவமாகிய சுவை,ஒளி ஓசை,ஊறு,நாற்றம் என்பனவும் அவ்றின் பரிணாமமாகிய மெய். வாக்கு கண் மூக்கு செவி என்பனவற்றையால் செயற்படும் வாக்கு. பாணி பாதம் பாயு உபந்தம் என்பன கூட இவ்வாறு அவாவும் மனமும் அவனது பொய்யான வேடத்தைக் கண்டு அவனை வஞ்சித்து, இகழ்ந்து பேசின.
ரவியின் செயலால் அமல் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தான். ஒருவர் செய்த உதவியை நாம் அனுபவிப்பது போல் அதனைத் துன்பமில்லாமல் உதவி செய்தவரைக் காப்பாற்றுவதும் நம் கடமையல்லவா? ரவி போன்றோர் நம்மில் பலர் உலாவிக் கொண்டு தானே இருக்கின்றார்கள்!


குறள் 275 பற்றற்றோம் என்பார் பாடிற்றொழுக்கம் எற்றெற்றென்று
          ஏதம் பலவும் தரும்
.

No comments:

Post a Comment