Monday, June 25, 2012

ஜம்புவும் சாந்துவும்

அன்று வெள்ளிக்கிழமை! இன்றுடன் பாடசாலை விடுமுறை. ஜம்புவும், சாந்துவும் மிகவும் உற்சாகமாய் இருந்தார்கள்.
'இந்த விடுமுறையில் நான் எல்லா கதைப் புத்தகங்களையும் வாசித்து விடுவேன்' என்றாள் சாந்து. அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி! சுறுசுறுப்பானவள்.
'ஆமாம், நானும் இம் முறை மாமா வாங்கித் தந்த டார்சான், விநோத உலகம் புத்தகத்தைப் படிக்க வேண்டும். என்னுடைய நண்பர்கள் கிறிக்கெற் மெட்ச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்' என்றான் ஜம்பு.
'அப்படியா நல்லது! இந்தமுறை கிறிக்கெற் விளையாட்டுப் போட்டிக்கு நான் உனக்கு நல்ல தொப்பி வாங்கித் தருகின்றேன். இது எதற்குத் தெரியுமா?' என்றாள் அம்மா.
'எனக்குத் தெரியும்! அம்மா! அம்மா! ஜம்பு இந்த முறை வகுப்பில் மூன்றாம்பிள்ளை வாங்கியதால் தானே அம்மா! நானும் முதலாம் பிள்ளை வாங்கியிருக்கின்றேன். எனக்கு ஒன்றும் இல்லையா அம்மா! என்று மெதுவாகச் செல்லச் சிணுங்கல் சிணுங்கத் தொடங்கினாள் சாந்து.

' உங்களுக்கு இம்முறை உங்களுடைய சிறுவர் கணக்கிற்காகக் கிடைத்த கணனியை அப்பா கொழும்பிலிருந்து வரும்போது கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கின்றார்' என்று அம்மா சொன்னதும் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தாள் சாந்து!
அக்காவும் தம்பியும் சந்தோசமாக எல்லா கதைப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு படிப்பதற்குத் தயாரானார்கள்.
அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஜம்பு மெல்லமாய் கொட்டாவி விட்டான்.
'என்னா ஜம்பு! தூக்கம் வருகின்றதா? இதோ உனக்குப் பிடித்த இனிப்பு அப்பம் செய்திருக்கின்றேன். வா சாப்பிடு' என்றாள் அம்மா.
' அம்மா எனக்கு முட்டை அப்பம் ஒன்று வேண்டும். கொஞ்சம் மிளகு குறைத்து வேண்டும்' என்றாள் சாந்து.
'அக்கா! கம்பியூட்டரில் ஈ மெயில் ஒன்று அனுப்ப வேண்டும்!'
' யாருக்குத் தம்பி........ அனுப்ப வேண்டும்?'
'காட்டுத் தலைவன் சிங்க ராசாவுத்தான். நாம் அடுத்த வாரம் காட்டிற்குச் செல்ல அனுமதி வாங்க வேண்டும்'
'அப்படியா, உன்னிடம் ஈமெயில் முகவரி இருந்தால் சொல்லு! அனுப்புவோம்' என்றாள் சாந்து.
'நான் நூலகத்திலிருந்து வாங்கி வந்தேன். இதோ ஈ மெயில் அட்ரஸ் மiபௌiபொயளூபஅயடை.உழஅ
மனிதர்களிடம் இருந்து வந்த ஈமெயில் பற்றி குரங்கார் சிங்கராசாவுக்கு எடுத்துரைத்தார்.
அதனை சேவலாருக்கு நகல் ஒன்று எடுத்துக் கொடுக்கும்படி சிங்கராசா கூறினார்.
மனிதர்கள் அனுப்பிய ஈமெயிலும் அவர்கள் காட்டிற்கு வருவதைப் பற்றியும் காட்டுத் தீயாய் செய்தி பரவியது.
எல்லோரும் அவர்கள் வருவதைப் பற்றி பலவாறாகக் கதைப்பதை சிங்கராசாவுக்கு அவரது மந்திரி சபையில் உள்ள உறுப்பினர்களான மாடு, யானை, வாத்து உட்பட பலர் எடுத்துரைத்தார்கள்.
காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் கூடி பலவாறாக யோசித்தன. அன்று முழுவதும் மனிதர்களைப் பற்றி ஒவ்வொருவரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
சிலர் நல்லதையும் பலர் கெட்டதையும் முன்வைத்தார்கள்.
பல மிருகங்களுக்கு மனிதர்களைப் பார்க்க ஆசையாக இருந்தது.
அவர்கள் மிகவும் திறமைசாலிகள்.  இன்று உலகத்தை தொழிநுட்பத்தாலும் அறிவாலும் வென்றிருக்கின்றார்கள். அவர்களிடம் பல நல்ல விடயங்கள் உள்ளன என்ற பேச்சும் அடிபட்டது.
அவர்கள் நமக்காக டீடரந உசழளள வைத்திருக்கின்றார்கள் என்றது மான்.
சிங்கராசாவிற்கு இது பெருந் தலைவலியாக இருந்தது.
' உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுங்கள்' என்றார் சிங்கராசா
அமைச்சரைவ கூடியது.
'அரசே! மனிதர்கள் இங்கு வந்தால் நமது இயற்கைத் தன்மையை சீரழித்து விடுவார்கள்' என்றது பறவைகள் கூட்டம்.
'அதுமட்டுமல்ல, அவர்கள் வந்தால் நம்மைப் பிரித்துவிடுவார்கள். அவர்கள் தான் நம்மை காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள் என இரண்டாகப் பிரித்தார்கள். இங்கு வந்தால் நம்மினத்திற்கு ஆபத்து தான் என்றது மாடும் புலியும்.
'அப்படிச் சொல்வது நியாயமில்லை. நான் ஒருமுறை அவர்கள் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்துவிட்டேன். அவர்கள் என்னை காப்பாற்ற பெரும்பாடுபட்டார்கள் என யானையார் வக்காளத்து வாங்கினார்.
சிங்கராசா எல்லாரும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மௌனம் கலைத்தார்.
' யாரையும் நாம் முழுதாகத் தெரிந்து கொள்ளாமல் குறைகூறக் கூடாது. அதனால் முதலில் நமது நூலகத்தைப் பயன்படுத்தி மனிதர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சேகரியுங்கள். அதற்குப்பிறகு நாம் ஒரு முடிவுக்கு வரலாம்' என்றார் சிங்கராசா.
அனைவரும் சிங்கராசா சொன்னக் கூற்றைக் கேட்டுக் கொண்டு கலைந்து சென்றனர்.
கிளியாரும் குரங்காரும் நூலகத்திலுள்ள 'ஜாம்பவான்கள்' , மனிதர்கள் நூலை எடுத்துக் கொண்டு படித்தார்கள்.

ஆந்தையாரும் பறவைகளும் வானைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகள் தமக்குள் பேசிக் கொண்டன.
அவர்கள் நம்மைப் போலவே பறக்கும் விமானங்களை வைத்திருக்கின்றார்களாம். அது வானில் நம்மைவிட உயரமாகப் பறக்குமாம்.
ஒரு வகை விமானத்தில் மட்டுமே அவர்கள் பயணம் செய்வார்களாம். சில விமானங்கள் குண்டுகள் போட்டு எதிரிகளைத் தாக்கி அழிக்குமாம்.
சில வகையான விமானங்கள் தகவல் தொழில் நுட்பங்களுக்காகப் பயன்படுத்துகின்றார்களாம்.
அவர்களைப் பார்த்துத் தானே நாமும் எல்லாவற்றையும் செய்திருக்கின்றோம் என்றது குருவிகள்.
ஆமாம்! ஆமாம்! மனிதர்கள் நம்மைப் போல அல்ல! ஆறறிவுப் படைத்தவர்கள். அவர்கள் வல்லமையுள்ளவர்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றது ஆந்தை!

விமானம் பறந்து வந்தால் எனது இறக்கைகள் ஒடிந்துவிடுமே! நான் என்ன செய்வது? கவலையுடன் கேட்டது பருந்து!
அப்படியெல்லாம் கவலைப்படத் Nவையில்லை! அவர்கள் நமக்கு ஆபத்து இல்லாமல் தானே இவ்வளவு காலமும் பயணித்தார்கள்!
அதுவும் வருபவர்கள் இரண்டுபேர் தான். அக்காவும் தங்கையும் தான்! காட்டிற்குள் அவர்கள் நடந்து தான் வருவார்கள் என்றது காக்கை!
' அம்மா, நானும் சாப்பிடுகின்றேன். எனக்கும் செய்து தாருங்கள்' என்றாள் சாந்து.
'உங்கள் இருவருக்கும் உணவு தயாராகிவிட்டது. புத்தகத்தை அழகாக எடுத்து அடுக்கி வைத்துவிட்டு கைகளைக் கழுவிக் கொண்டு வாருங்கள்'
என்ற குரலைக் கேட்டதும் ஜம்பு அடுத்த நொடியே புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு அம்மாவிடம் ஓடிவந்தான்.
உணவை உண்ட இருவரும் படுக்கைக்குப் போனார்கள். ஜம்புவும் சாந்துவும் தங்களுக்குக் கிடைக்கப் போகும் கணனியைப் பற்றியும் வாசித்தக் கதைப் புத்தகங்களையும் பேசிக் கொண்டே தூங்கிப் போனார்கள்.
இரவு பதினொரு மணியிருக்கும். ஜம்பு கனவுலகத்தில் மிதந்தான். ஜம்புவுக்கு டார்சானின் சாகசம் மீது எப்போதும் ஒரு கண்! வீட்டுக்குத் தெரியாமல் தோட்டத்திற்குச் செல்லும்போது மரத்தில் கயிறைக் கட்டி தாவுவது தான் அவன் வேலை!
எல்லா மிருகங்களும் கூடிப்பேசி முடிவுக்கு வந்தன. வரும் இரண்டு குழந்தைகளும் கள்ளங் கபடமில்லாதவர்கள். அவர்களை நாம் அன்புடன் வரவேற்று எம் இடத்தைச் சுற்றிக்காட்டி சந்தோசமாக அனுப்பி வைப்போம் என அவைகள் முடிவெடுத்துன!
தாங்கள் அனைவரும் ஜம்புவினதும் சாந்துவினதும் வருகையை ஏற்றுக்
கொள்வதாக அரசசபையின் செயலாளரான கரடியாருக்குத் தெரிவித்தன.
அதன் பிறகு மிகவும் சந்தோசமாக அவர்களுக்குச் சுற்றிக் காட்ட
வேண்டிய இடங்கள் பற்றி அவைகள் பேசிக் கொண்டன.
வருபவர்கள் குழந்தைகள். கள்ளங்கபடமில்லாதவர்கள். நம்மில் பலர்
விசங்களையும் நச்சுகளையும் வைத்திருக்கின்றார்கள். பலர் முன்
கோபமுடையவர்களாக இருக்கின்றனர்.
அவர்களுக்கும் நாம் வருபவர்களைத் துன்பப்படுத்தக் கூடாது என்று
விளங்கப்படுத்தல் வேண்டும் என்றன.
வாருங்கள் வாருங்கள்
எங்கள் வண்ணமயமான
காட்டிற்கு வருகிறார்கள்!
நல்ல பிள்ளைகளாம்
ஜம்புவும் சாந்துவும்
நாமனைவரும் கூடிப் பாடியே
ஆடலாம் வாருங்கள்!
வண்ண மயில் தோகைவிரித்தே
வானம் கேட்க 'கிக்கீ...கிக்கீ...' எனவே
கானக இசை போடலாம் இங்கே
வாருங்கள்.. வாருங்கள்......
காட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜம்புவும் சாந்துவும் விடைபெற்றுக் கொண்டனர்.
அவர்கள் பிரிவைத் தாங்க முடியாமல் ஆடார் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.
அழகான இயற்கைக் காட்சியைப் பார்த்துக் கொண்டு அந்தக் வலையை மறக்க நினைத்தது ஆடு!
அப்பிள் மரத்தைக் கண்ட சாந்து மரத்தில் ஏறி பழத்தைப் பறிக்க ஆசைப்பட்டாள்.
ஆசை ஆசையாய் அவள் மரத்திலேறினாள்.
பழங்களைப் பறித்துக் கொண்டு மெல்லமாய் இறங்கினாள்.
ஜம்பு குரங்கிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அது அவன் தலையைக் கோதிக் கொடுத்தது.
மகிழ்ச்சியுடன் அவன் குரங்கரைப் பார்த்தான்.

குரங்கார் அவனுக்கு ஒரு நொடியில் மரத்திலேறி பழங்களைப் பறித்துக் கொடுத்து உண்ணக் கொடுத்தார்.
ஜம்புவும் சாந்துவும் மனம் மகிழ்ந்தார்கள்.
வரும் வழியில் பெரியதொரு மலைப்பாம்பைக் கண்டான் ஜம்பு!
அதனை ஆச்சரியத்துடன் பார்த்த ஜம்பு சாந்துவைக் கூப்பிட்டுக் காட்டினான்.
' ஐயோ! இது என்ன அனகொண்டாவா? என அலறியடித்தாள் சாந்து!
'பயப்பாதே! இது நம்மை ஒன்றும் செய்யாது! நல்லது! என்றான் பிறகு அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பெரிய மரத்தில் இன்னுமொரு பெரிய மலைப்பாம்பு மரவாதில் சுற்றிக் கொண்டிருந்தது.
அதன் வாலைப்பிடித்து இழுத்தான் ஜம்பு!
வழுக்கிக் கொண்டு வந்த பாம்பின் வால் கீழே வரவே ஜம்பு திடீரென கீழே விழுந்தான்.
அடிபட்ட ஜம்பு 'அம்மா.... என
அலறித் துடித்தான்'
உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அம்மா வெளியே ஓடி வந்தாள்.
' என்ன கனவு கண்டாயா? என தண்ணீரைக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தாள்! ஜம்புவும் சாந்துவும் மறுநாட்காலை அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து காட்டிற்குச் செல்ல ஆயத்தமானார்கள்.
' கவனம்.... காட்டில் கொடிய மிருகங்கள் எல்லாம் உள்ளன. தனியாகச் செல்வது ஆபத்தானது. பார்த்துப் பிள்ளைகளே!' என்றார் அம்மா.
'இல்லை! பிள்ளைகளே உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையு ம் வரவேண்டும் என்றால் நீங்கள் தனியாகவே செல்ல வேண்டும். அத்துடன் நீங்கள் சிங்கராசாவின் அனுமதியைப் பெற்றுத்தானே செல்கின்றீர்கள்.இருந்தாலும் மிருகங்களுடன் சேட்டை விடாமல் அன்பாகப் பழகி பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றனார்.
அவர்கள் இருவரும் மிக மகிழ்வுடன் தங்களது பயணத்தைத் தொடர்ந்து காட்டை அடைந்தனர். அங்கு மனிதர்களுக்குப் பழக்கமான மாடார் செல்லமாக ஜம்புவின் தோளில் கையை வைத்து அழைத்துச் சென்றார். காட்டிலுள்ள யானை, கரடி,புலி,சிங்கம், மலைப்பாம்பு, ஒட்டகம், குரங்கு முதலிய மிருகங்களும் பறவைகளான கிளி, மைனா, காகம், குருவி, பருந்து உட்பட எல்லா வகை காட்டு ஜீவராசிகளும் அவர்களுக்கு உணவளித்து நட்புடன் உறவடின.
ஜமபுவும் சாந்துவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
புலியாருக்கு நீண்ட நாட்களாக படகில் செல்ல வேண்டும் என்ற ஆசை!
ஆனார். அதற்குப் பெரிய படகு ஒன்று தேவையே!

ஜம்புவிடம் தனது ஆசையை புலியார் சொல்லவே ஜம்பு அதனை அமைத்துக் கொடுத்தான்.
அந்தப் படகில் மிருகங்களும் பறவைகளும் அதில் ஏறிக் கொண்டன. அவைகள் மகிழ்ச்சி வெள்ளத்தால் மிதந்தன. முதன் முதல் படகுச் சவாரி செய்த மகிழ்ச்சியில் அவைகள் மகிழ்ந்தன.
ஆறின் இருகரைகளிலும் மலைகளும், மரங்களும் , தாவரங்களும் கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுபப்தாக ஜம்பு சொன்னான். சாந்து இந்தப் புதிய படகுச் சவாரியால் ஆச்சரியமடைந்தாள்.
'ஆஹா! எவ்வளவு அழகான இயற்கை! இதைப் பாதுகாத்தால் மட்டுமே நம் மிருகத் தோழர்கள் நலமாக வாழலாம் என்றாள் சாந்து!
'மனிதர்கள் மரம் வெட்டுவதால் தான் எங்களது காடுவளமிழந்து போகின்றன.
'அதுமட்டுமல்ல! அவர்களுக்கும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்படுகின்றது என்றது பன்றியார்.'
'ஆமாம்! இது பற்றி எங்கள் அரசாங்கமும் அனர்த்த அமைச்சு உட்பட பல சமூக ஆர்வலர்களும் தொடர்புசாதனங்களினூடாக மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்கள் என்றாள் சாந்து! அதனைப் பார்த்த கரடியாரும் புலியாரும் ஜம்புவிற்குப் பாடம் எடுத்தார்கள்.
பயிற்சி இல்லாமல் முயற்சி செய்யக்கூடாது. அவை சில வேளை ஆபத்தானதாக முடியலாம். அதனால் கை, கால்கள் உடையலாம். சில வேளை பலர் செத்துப் போயிருக்கின்றார்கள் என்றது புலியார்.
களைப்பாகவும் பயத்தினாலும் அவர்கள் சொன்னதைக் கேட்ட ஜம்பு
கண்ணயரத் தொடங்கிவிட்டான்.
அதட்டிய கரடியார் இருட்டு முன்னதாக ஏனைண இடங்களைப் பார்க்க வேண்டும் என்று செல்லமாக அதட்டி அவனை உற்சாகப்படுத்தினார். மனிதர்களான ஜம்புவும் சாந்துவும் காட்டிற்கு வந்தச் செய்தி கேட்டு நுளம்பார் கொதித்துப் போனார்.
இவர்களைப் பழிவாங்கத்தானே மலேரியா, டெங்கு என நோய்களை உருவாக்கினேன். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாக எப்படி வந்தார்கள்.
சாப்பிட்ட யோகட் கப், செமன் டின், சிரட்டை, டயர் என நான் வாழ்வதற்கு பல வகைகளில் உதவி செய்தவர்கள் தான்!
ஆனால், இரவு வேளைகளில் கொசுமருந்தடித்தும் நெட்டைப் போட்டும் கைகளால் அடித்துக் கொன்றும் நமது சந்ததியை வளரவிடாமல் தடுப்பவர்கள் என்றது நுளம்பார்.
'ச்சீ... அவர்கள் நமது விருந்தாளிகள். எதிரிகளாயிருந்தாலும் விருந்தாளிகளை வரவேற்பது தான் சரி என்றது குஞ்சு நுளம்பு! கரடியார் அந்த மரத்தில் சிறிது நேரம் இளைப்பாற முயன்றார்.
ஜம்புவுக்கு டார்சானைப் போல அரச மரத்திலிருந்து பலாமரத்திற்குச் செல்ல ஆசைப்பட்டான்.
அங்கிருந்த வேர்களைப் பற்றிக் கொண்டு ஓரேயடியாக தாவினான்.
முதன் முதலில் தாவியதால் அவனால் நீண்ட தூரம் தாவ முடியவில்லை.
கீழே விழப் போனான் ஜம்பு.
'ஐயோ! ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கள்! என அலறிய சத்தம் கேட்டு குரங்கார் தாவிப் பிடித்து அவனைக் காப்பாற்றினார். ஜம்பு சிறிது நேரத்திற்கெல்லாம் டார்சானைப் போல சட்டையைக் கழற்றிக் கொண்டு சுற்றிப் பார்க்கத் தயாராகினான்.
கரடியார் அவனைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். அவன் எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு வந்தான்.
சிறிது நேரத்தில் கடுங் கோபத்துடன் புலியார் ஒருவர் அவர்கள் பின்னால் ஓடிவரவே செய்வதறியாது கரடியாரும் வேகமாக ஓடினார்.
ஜம்பு பயத்தால் விழி பிதுங்கிப் போனான்.
ஓடி வந் கரடியாரோ மரத்தில் ஏறிக் கொண்டார்.
புலியாரோ வந்த வேகத்திலேயே ஓடிப் போனார்.
மரத்திலிருந்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர்களுக்கு முன்னால் முயலார் ஓடிக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment