Monday, June 25, 2012

நடுத்தோட்டம் ஒரு இரம்மியமான சூழலைக் கொண்ட இயற்கையின் பிறப்பிடம். அந்த மலைகளின் உயர்வான இடங்களில் நமக்கு இயற்கை மகிழ்வைத் தரும். அந்த மலைகளின் வடிகாணில் ஒரு பாதையை உருவாக்கியிருந்தார்கள் அந்த தோட்டத்து மக்கள்.
தியாகு அந்த தோட்டத்தில் புகழோடு வாழும் ஒருவன். எந்த விழாக்களிலும் ஆலயத் தொண்டுகளிலும் முன்னின்று செயற்படுபவன். பலராலும் போற்றப்படும் தியாகு உண்மையில் வெளி உலகத்திற்குக் காட்டும் ஒரு முகம் மட்டும் தான். அந்த தோட்டத்தில் மட்டுமல்லாமல் பலரது தோட்டத்திலுள்ள தொழிலாளர்களின் உழைப்பான ஈ.பி,எப்பைச் சுரண்டும் சிரித்த முதலை!
அவன் பரலது உழைப்பை தன் சுயநலத்திற்காக அப்படியே வளைத்துப் போடுவதில் வல்லவன். வெளியில் புகழையும் உள்ளே பழியையும் சுமக்கும் ஒரு துர் ஆத்மா! பலரது குடும்பங்களின் கண்ணீரை தனது அடுப்பளைப் பாணைக்கு சோறு வடிப்பதற்காக பயன்படுத்தும் வஞ்சகன். பலரது வசைபாடலை அழகிய ரீங்காரமாகக் கேட்டுக் கொண்டு அவர்களைப் பழிவாங்க நினைக்கும் இவனை ' நாசமாப் போ' என மண்ணைவாரித் தூற்றாதோரும் இல்லை.
தியாகு போன்ற பழியோடு வாழ்வதை விட புகழ் இல்லாமல் அந்தத் தோட்டத்தில் இருக்கும் ஐயாவு 'நல்ல மனிதர்' என சொல்லப்படுவதைக் கேட்டு பழியோடு வாழும் இவனை யாரும் மனிதராக மதிக்காததும் தனது செயலால் தான் என்பதை உணர்வானா?

குறள்  -  வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்: இசை ஒழிய
                  வாழ்வாரே வாழா தவர்.

No comments:

Post a Comment